இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் : முதல் இடத்தில் எந்த நாடு?
Sep 1, 2025, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் : முதல் இடத்தில் எந்த நாடு?

Web Desk by Web Desk
Feb 22, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை வெளிநாடுகளில் படிக்க விரும்புகின்றனர். அதில் இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் குறித்து பார்ப்போம்.

இந்திய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை வெளிநாடுகளில் படிக்க அதிகமாக விரும்புகின்றனர். தற்போது 13.2 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர். அவர்களில் 4.6 லட்சம் பேர் அமெரிக்காவில் மற்றும் 1.83 லட்சம் மாணவர்கள் கனடாவில் உள்ளனர் என்று தரவு கூறிகிறது.

அதேபோல் சமீப காலமாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் படிக்க விருப்பப்படும் வெளிநாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் ஜெர்மனி, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா மற்றும் மூன்றாவது இடத்தில் பிரித்தானியா இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் :

1. ஜெர்மனி :

ஜெர்மனியில் மொத்தம் 423 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன, இதில் 108 பல்கலைக்கழகங்கள், 211 பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் 52 கலை மற்றும் இசைக் கல்லூரிகள் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியில் இந்தியாவில் இருந்து 42,997 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பொறியியல், சட்ட மேலாண்மை மற்றும் கணிதம் ஆகியவற்றை விருப்ப பாடமாக தேர்ந்தெடுகின்றனர்.

அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் தரவு கூறுகிறது.

2. நெதர்லாந்து :

நெதர்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், க்ரோனிங்கன் மற்றும் டெல்ஃப்ட் ஆகிய இடங்களில் உள்ளன.

நெதர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தரவுகள் படி, நெதர்லாந்தில் தற்போது 3,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகக் கூறுகிறது.

3. போலந்து :

போலந்தில் கிட்டத்தட்ட 457 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. போலந்தில் சுமார் 2,500 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

போலந்தில், துருக்கி மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகிறது.

4. ஹங்கேரி :

ஹங்கேரியில் மொத்தம் 65 பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் பல புடாபெஸ்டில் உள்ளன. புடாபெஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பல்கலைக்கழகம், மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் ESSCA மேலாண்மை பள்ளி ஆகியவை நன்கு அறியப்படும் பல்கலைக்கழகமாக உள்ளன.

ஹங்கேரிய பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 1,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட தரவு கூறுகிறது.

5. பெல்ஜியம் :

பெல்ஜியம் ஐரோப்பாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் பெல்ஜியத்தில் சுமார் 24,732 இந்திய மாணவர்கள் படித்து வருவதாக தரவுகள் கூறுகிறது.

6. நியூசிலாந்து :

நியூசிலாந்தில் எட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் ஆக்லாந்து பல்கலைக்கழகம் உலகளவில் உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

பல இந்திய மாணவர்கள் தங்கள் எம்பிஏ படிப்பு அல்லது கல்வி ஆராய்ச்சிக்காக நியூசிலாந்து செல்கின்றனர். அந்நாட்டில் கிட்டத்தட்ட 15,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

Tags: Indian Students Want to Study Abroad: Which Country Comes First?
ShareTweetSendShare
Previous Post

சமத்துவத்திற்காக போராடிய, பாரதத்தின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை! – அண்ணாமலை

Next Post

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை

Related News

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

சேலம் : இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 250 பள்ளி மாணவர்கள்!

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies