போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 22, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று கைது செய்ப்பட்டனர்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

முறையான கல்வித் தகுதியும், தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்று, பல ஆண்டுகளாகக் காத்திருந்தும், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரும் தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்கள் நேற்றைய தினம் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள்,… pic.twitter.com/cwfVXkRHKv

— K.Annamalai (@annamalai_k) February 22, 2024

அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது.

உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பணம் வசூலிக்கலாம் என்பதற்காக மாற்றுத் திறனாளர்கள் பணி நியமனங்களைக் காலதாமதப்படுத்தும் எண்ணம் இருந்தால், துறையற்ற அமைச்சர்களின் இன்றைய நிலையை பணிவன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: k annamalai
ShareTweetSendShare
Previous Post

கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

WPL : தொடக்க விழாவில் ஷாருக்கான் பங்கேற்பு!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies