முன்பெல்லாம் அரசியலில் மக்களுக்கு தங்கள் முகம் தெரியவேண்டும் என்றால் அரசியல்வாதிகள் தங்கள் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும், எதிர்க்கட்சியினர் செய்யும் ஊழல்கள், குற்றங்களையும் மக்கள் முன்னிலையில் தெரிவிப்பது வழக்கம், ஆனால் தற்போது உள்ள அரசியல்வாதிகளோ முன்னணி நட்சத்திரங்கள் குறித்து அவதூறாக பேசி பிரபலமடைகின்றனர்.
அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அவதூறாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி கூறியதாவது, “மக்களின் கருத்துக்களை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்றும் “இந்த ஊடக நிறுவனங்கள் அதானி மற்றும் அம்பானிக்கு சொந்தமானவை. பிரதமர் நரேந்திர மோடியை நாள் முழுவதும் விளம்பரப்படுத்துகின்றன. சில சமயங்களில் ஐஸ்வர்யா ராய் நடனமாடுவதைத் தொடர்ந்து அடுத்த நொடி அமிதாப் பச்சன் தனது அசைவுகளை வெளிப்படுத்துவார் என அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யா ராயின் பெயரை ராகுல் காந்தி இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
பெண் கலைஞர்களின் பெயர்களை தனது உரைகளிலும் அறிக்கைகளிலும் பயன்படுத்தி அவர்களின் படைப்பு, தோல் நிறம் அல்லது குணம் குறித்து பேசி கவனத்தை ஈர்க்கும் தலைவர் அவர் மட்டுமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதேபோல் நடிகை த்ரிஷாவை 25 லட்ச ரூபாய் கொடுத்து பொழுதுபோக்கிற்காக எம்எல்ஏ ஒருவர் ரிசார்ட்டுக்கு அழைத்ததாக அதிமுக கட்சி நிர்வாகி ஏவி ராஜு குற்றம் சாட்டினார். ஏவி ராஜுவின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக த்ரிஷா தனது எக்ஸ் தலத்தில் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ஏ.வி ராஜு, தான் “த்ரிஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார்” என்று கூறியதாகவும், எந்த நடிகைகையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் மன்னிப்பு கூறியிருக்கிறார்.
இதேபோல், 2019 ஆம் ஆண்டு நடிகை ஜெயபிரதாவின் உள்ளாடைகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி எம்பி அசம் கான் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான ஜெயபிரதாவை பற்றி ஆசாம் கான் ஆவேசமான அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அவரைத்தொடர்த்து சமாஜ்வாடி கட்சியை பிரோஸ் காணும், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடிகை ஜெயா பிரதா குறித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடிகை ஜெயா பிரதா வீதியில் நடனமாடினால் எப்படி இருக்கும் என அவதூறாக பேசினார்.
இதேபோல் நடிகை ஹேமா மாலினி குறித்து காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான பசி. ஷர்மா அவதூறாக பேசியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதுபோன்று நடிகைகள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவதில் சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேடைப்பேச்சுக்கு என்று சும்மா வாய்வார்த்தையில் பெண்கள் குறித்தும், பெண்கள் நலன் குறித்தும் பேசுவது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் பிரபலமடைய வேண்டும் என இப்படி அவதூறாக பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் இது போன்ற அரசியல்வாதிகள்.