இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் நாடாளுமன்ற தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, இன்று வெளியாக உள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது.