2024 ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 5 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
IPL 2024 schedule for the first 21 matches. #IPLOnStar. pic.twitter.com/hNlgoSzae7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2024
தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் குறித்து வந்துள்ளது.
ஐபிஎல் அணிகள் :
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.