பெண்கள், பத்திரிகையாளர் உள்ளிட்டவர்களுக்கு மேற்கு வங்கத்தில் பாதுகாப்பாக இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,
மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு ஏற்பட்ட அவமானம். பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். இதனை காக்க மம்தா அரசு தவறிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தை காப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை. மத்திய அமைச்சர்கள் சிலர் சண்டிகருக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். வன்முறை மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.