விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூரியாவின் விலை 300 ரூபாயில் இருந்து 3000 ரூபாயை எட்டியுள்ளது. ஆனால் இன்றும் விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு நடவடிக்கை தான் காரணம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையாக செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். சிறிய விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.