வெளிநாட்டு நாய்கள் இனப்பெருக்கம் செய்ய அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, baseet hound, French bulldog, alaskan malamute மற்றும் Siberian husky ஆகிய வெளிநாட்டு நாய்கள் இனப்பெருக்கம் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆக மொத்தம் 9 வகையான வெளிநாட்டு நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தட்பவெப்பநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் காலத்தில், இனப் பெருக்கத்திற்கு என பயன்படுத்தப்படும் நாய்கள் அனைத்திற்கும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.