ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாய் திருமலாநீதி என்ற இளைஞர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளார். இந்த வாஷிங் மெஷின் நீளம் 1.45 இன்ச் , அகலம் 1.61 இன்ச் மற்றும் உயரம் 1.69 இன்ச்சாக உள்ளது.
சாய் திருமலாநீதி சிறிய சிறிய பொருட்களை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷினைத் தயாரித்துள்ளார். இதை உருவாக்கியது மட்டுமில்லாமல் பயன்படுத்தியும் காண்பித்துள்ளார்.
ஒரு மிக சிறிய துணியை போட்டி எடுத்து அந்த மெஷினில் தண்ணீர் நிறப்பி துணி துவைக்கும் பௌடரை கலந்து அதை செயல்பட செய்துள்ளார்.
இந்த மிக சிறிய மெஷின் அனைவரிடமும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படைப்பு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.