இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெற்றது .
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்தது. தன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்துள்ளது.
இதில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ராவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக இவர் களத்தில் இறக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் இந்த போட்டியில் பும்ராவின் அலையோசனையை பின்பற்றி விளையாடியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இவர், “இந்திய அணிக்காக அறிமுகமாகியதில் எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். எந்த டென்ஷனும் இல்லாமலேயே களமிறங்கினேன். இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியையும் எனது கடைசி போட்டியாகவே கருதி களமிறங்குகிறேன்.
அதன் காரணமாகவே தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. இந்த போட்டி தொடர்பாக பும்ரா என்னிடம் பந்துவீசும் போது லெந்தை கொஞ்சம் குறைத்து வீசுமாறு அறிவுறுத்தினார். அவர் கூறியதை தான் அப்படியே செயல்படுத்தினேன். முதல் விக்கெட் வீழ்த்திய பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது சோகம் தான். இருப்பினும் கிராலியின் விக்கெட்டை விரைந்து வீழ்த்திவிட்டோம்.
அதனால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. காலையில் பிட்சில் கொஞ்சம் பவுலர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் நேரம் கடந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. அதனால் ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து பவுலிங் செய்தோம்” என்று கூறியுள்ளார்.