ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு மட்டும் புற்றுநோய் உறுதியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவரது உடலில் சத்தமே இல்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் முதலிடம் பிடித்துள்ளது புற்று நோய்.
புற்று நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, காப்பாற்றுதவற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டது. ஆனாலும், புற்று நோய் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகமாக உள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்குக் கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்டத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படும்வரை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.