பாஜக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறக்கப்படும்! - அண்ணாமலை
Jul 27, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறக்கப்படும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 24, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை, சங்கரன்கோவிலில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

சங்கரன் கோவிலில் மட்டும் நான்காயிரம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும் விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் உள்ளது.

பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம்.

ஒரு கிலோ பருத்தி நூல் 320 ரூபாய். ஒரு கிலோ பாலியஸ்டர் நூலின் சந்தை விலை 160 ரூபாய். பருத்தி நூலில் நெய்ய வேண்டிய வார்ப் பகுதியை, பாலியஸ்டர் நூலில் நெய்து, கொள்முதல் செய்த 1.68 கோடி இலவச வேட்டியில் மட்டும், சுமார் 40 முதல் 60 கோடி வரை ரூபாய் ஊழல் செய்துள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி.

மேலும் பெடல்தறியில் ஒரு வேட்டி நெய்ய 63 ரூபாய் வழங்கப்படுகிறது. விசைத்தறியில் நெய்த்தால் 23 ரூபாய். விசைத்தறியில் நெய்துவிட்டு, பெடல்தறியில் நெய்ததாகச் சொல்லி ஒரு வேட்டிக்கு 40 ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஞ்ஞான ஊழலுக்கு முழு உதாரணம் திமுகதான்.

வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரளா மாநில எல்லைக்குள் செண்பகவல்லி அணை இருக்கிறது. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தென்காசி மாவட்டத்தில் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக செண்பகவல்லி அணை திகழ்ந்தது.

1962ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், 1982ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு எம்ஜிஆர் அவர்களும், அணையைப் பழுதுபார்க்க தமிழக அரசின் பங்கினை வழங்கினார்கள். ஆனால், கேரளா அரசு அன்று தொடங்கி இன்று வரை, இந்த அணையை சரிசெய்ய முன்வராமல் இழுத்தடித்து கொண்டு வருகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு, இந்த ஆணை பெரியார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது என்று கூறி இதற்கு மேல் இந்த அணையை இயக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக இது குறித்து ஒன்றுமே செய்யவில்லை. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனநீர் பிரச்சனைக்கு தீர்வு இந்த அணையை சரிசெய்தால் கிடைக்கும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது. கேரளா கம்யூனிஸ்ட்களுடன் அன்பு பாராட்டும் முதல்வர் முக ஸ்டாலினால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக கம்யூனிஸ்ட் கட்சி இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாது. அதே போல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பேபி அணையை சரி செய்ய வேண்டும் என்றார்கள். இன்று வரை பேபி அணையும் சரிசெய்யப்படவில்லை.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற இரண்டு நவோதயா பள்ளிகள் – காமராஜர் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழிக் கல்வியோடு சேர்த்து, ஆங்கிலம், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மொழி விருப்பப் பாடங்கள் என ஐந்து மொழிகள் கற்கும் வாய்ப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.

இதுவரை அரசு வேலை பெறாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதை உறுதி செய்ய ஒரு தனி இடஒதுக்கீடு முறை உருவாக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறப்பு, பனை பொருள்கள் ஊக்குவிக்கப்படும். காவல்துறைக்கு, 8 மணி நேர பணிநேரம் மற்றும், ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். அறம் இல்லாத இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும். மத்திய அரசு வழங்கும் விவசாய கௌரவ நிதி 6000 ரூபாயுடன், மாநில அரசின் பங்கு 9000 ரூபாய் என, 15,000 ரூபாய் விவசாயிகளுக்கு பாஜக வழங்கும்.

ஊழல், குடும்ப, அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திராவிட அரசியலில் இருந்து மக்கள் விடுதலை எதிர்பார்க்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டம், வரும் பாராளுமன்றத் தேர்தல்.

இந்தத் தேர்தலில்,  பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை, தமிழகம் முழுவதும் நிச்சயம் துணை நிற்கும். தமிழகத்தில் உருவாகவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கான விதையாக இந்தத் தேர்தல் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaien mann en makkal in rameshwaram
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து 353 ரன்களில் அவுட்!

Next Post

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்! –  தமிழக கட்சிகள்  தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தல்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies