குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், குரு ரவிதாஸ் ஆன்மீக ஞானத்தின் உருவகம். அவர் நம்பிக்கை மற்றும் பக்தியுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும், சாதி அடிப்படையிலான மற்றும் சமூக பாகுபாடுகளை ஒழிப்பதற்காகப் போராடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்தி நடைமுறைகளைப் பின்பற்றி சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டார். அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை பரப்பியதாகவும், மக்களுக்கு ஞானப் பாதையைக் காட்டியவர் என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அவரின் போதனைகளை வாழ்வில் ஏற்றுக்கொண்டு தேசத்தின் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்குமாறு பொது மக்களை குடியரசுத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.