மேற்கு வங்கம் மாநிலம் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சம்பவ இடத்தில் தீயனை துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள ஜமுரியாவின், ஜதுடங்கா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில இருந்தவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வரைந்து சம்பா இடத்திற்கு சென்றுள்ளனர்.
தற்போது 6 தீயனை வாகனங்கள் சம்பா இடத்தில உள்ளது. தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த பயங்கர தீ விபத்து சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் நெருப்பு கருப்புகையாக மாறி அந்த இடமே மறுமையாக காட்சியளிக்கிறது.
இதேபோல் முன்னதாக கர்நாடகாவில் பிரபல கார் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
அதேபோல் டெல்லியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.