பாரத பிரதமர் மோடி சட்டப்பிரிவு 370 மூலம் பல நல்லதை செய்துள்ளதாக ஆர்டிகிள் 370 படம் பார்க்க சென்ற ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தான் ஆர்டிகிள் 370.
இப்படத்தை யாமி கெளதமின் கணவர் ஆதித்யா தார் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் தார் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. நாடுமுழுவதும் 1500 திரையரங்குகளில் 2200 திரைகளில் திரையிடப்படவுள்ளது இப்படம்.
இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பார்க்க மக்கள் குட்டக்குட்டமாக திரையரங்கிற்குள் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதை பார்க்க ஆவர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதில் ஒரு ரசிகர், “மோடி ஜி நல்ல வேலையைச் செய்துள்ளார். சட்ட பிரிவு 370 என்றால் என்ன என்றும் பெரும்பாலோனோருக்கு தெரியாது. அதேபோல் அந்த சமயம் என்ன நடந்தது என்பதைப் பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என்று கூறினார்.
மற்றொரு ரசிகர், “ஜம்மு காஷ்மீர் இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது. பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அங்கு அமைதி மற்றும் வளர்ச்சி உள்ளது , இதனை பார்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்று கூறினார்.
மற்றொருவர், “படம் உண்மையைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு நாளை தேர்வு இருக்கிறது, ஆனால் நாங்கள் படத்தைப் பார்க்க வந்தோம். படத்தைப் பார்க்க வேண்டும் என்று மோடி ஜி தனது உரையில் கூறினார்” என்று கூறினார்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி” 370 வது சட்ட பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ந்து வருகிறது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து ஆர்ட்டிகிள் 370 என்னும் திரைப்படம் வெளிவரவுள்ளதாக கேள்விப்பட்டேன்.
அந்த படம் எப்படி இருக்கும் என தெரியாது ஆனால் காஷ்மீர் பற்றிய உண்மைகள் நாட்டுமக்கள் அனைவர்க்கும் தெரியவரும் ” என கூறினார்.