பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், மக்கள் நலத்திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார்.
விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவில் இணைந்த சகோதரி விஜயதாரணியை வரவேற்கிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயதாரணி,
சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது மீண்டும் ஒரு தேசிய கட்சியான பாஜகவில் இணைந்துள்ளேன். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், மக்கள் நலத்திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. பெண்களுக்கு பாஜக தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது என்றார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
I am resigning from the position of primary membership and related posts held by me in the Congress party. pic.twitter.com/8PDtXkJ9HM— Vijayadharani MLA (@VijayadharaniM) February 24, 2024
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.