கிரிக்கெட் ஜாம்பவானான இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனையை படைத்த நான் இன்று.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் என்றால் அது நமக்கு பிடித்த அணி வெற்றி பெட்ரா நாள், நமக்கு பிடித்த வீரர் சாதனை படைத்த நாள் என்று நிறைய நாட்கள் உள்ளது.
அந்த வகையில் பிப்ரவரி 24 ஆம் தேதியும் கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத நாளாக உள்ளது. ஏனெனில் இந்த நாள் புதியதாக ஒரு சாதனை உருவாகியது.
14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், கேப்டன் ரூப் சிங் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய சாதனை படைத்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். இதுதான் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் இரட்டை சதமாகும்.
147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்கள் குவித்து ஊரு நாள் போட்டி தொடங்கி 39 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.
இவருக்கு முன்னர் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவெண்ட்ரி மற்றும் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் போன்ற வீரர்கள் மட்டுமே இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டனர்.
இதுமட்டுமின்று இந்த நாளில் மற்றொரு வீரரும் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் மேற்கிந்திய அணியின் வீரர் கிறிஸ் கெயில்.
2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கெய்ல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கெயில் 147 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 215 ரன்கள் குவித்தார்.