அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஒருவர், தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கொடுத்து அசத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் ஐலண்டில் வசிப்பவர் டாக்டர் திருஞானசம்பந்தம்-விஜயலட்சுமி தம்பதி. தமிழர்களான இந்த தம்பதி, விஜயலட்சுமி திருஞானசம்பந்தம் தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழ் கல்வி, தமிழ் பண்பாடு, தமிழ் சமயநெறி தழைக்க சேவை செய்து வருகின்றனர். தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கொடுக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தமிழகம் வந்த இந்த தம்பதியினர், தஞ்சை “தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.30 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழ் வளர்க்க வேண்டும் என்று, தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.