குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பிப்.26-ல் மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலுக்கு செல்கிறார்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலுக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். மிசோரம் பல்கலைக்கழக 18-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் தனது பயணத்தின்போது, அய்ஸ்வாலில் நடைபெறும் ஒன்பதாவது மிசோரம் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். பின்னர், தன்கர் அய்ஸ்வாலில் உள்ள ராஜ்பவனுக்கும் செல்கிறார்.