போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு : கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
Oct 25, 2025, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு : கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 25, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், தமிழக பாஜக சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட… pic.twitter.com/n8mJNDnPqd

— K.Annamalai (@annamalai_k) February 25, 2024

Tags: tamil nadu bjp presidentDMK officialsdrug traffickingAnti-Narcotics Unit.
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Next Post

புரோ கபடி : பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம் !

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies