அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனத்தின் ஒடிசியஸ் என்ற லேண்டர் கடந்த 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.
ஒடிஸியஸ் லேண்டர் 21 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.
லேண்டர் தரையிறங்கிய பிறகு பல நிமிடங்கள் கழித்து விண்கலத்துடன் தகவல்தொடர்புகளை பெற முடிந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆரம்ப சமிக்ஞை மங்கலாக இருந்தது, அதாவது லேண்டரின் சரியான இடம் மற்றும் நிலை குறித்து மிஷன் கன்ட்ரோலர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.
லேண்டரின் 6 காலில் ஒரு கால் நிலவு பாறை அல்லது வேறு ஏதேனும் பொருளில் முட்டுக்கொடுக்கப்பட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள கூறினர். இதனால் லேண்டர் ஒரு புறம் சாய்ந்து நிற்கிறது.
இருப்பினும் பூமி உடனான தரைக் கட்டுப்பாட்டு கொண்டுள்ளது. நன்றாக வேலை செய்கிறது என்றும் Intuitive Machines தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் அல்டெமஸ் கூறினார்.
Intuitive Machines லேண்டர் அதன் சூரிய ஒளி உருவாக்கும் சக்தியின் அளவிலிருந்து முழுமையாக விலகவில்லை என்று ஆதாரங்கள் கூறுகிறது. இது நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்திற்கான வீரர்கள் தரையிறங்கும் இடத்தை ஆய்வு செய்ய இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது ஏன் ஒரு பக்கம் சாய்ந்தது? விஷயம் என்னவென்றால், நிலவில் தரையிறங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஒவ்வொரு முறையும் நிலவு எவ்வளவு கடினம் என்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் soft-landing செய்துள்ளன.
On Feb. 22, 2024, Intuitive Machines’ Odysseus lunar lander captures a wide field of view image of Schomberger crater on the Moon approximately 125 miles (200 km) uprange from the intended landing site, at approximately about 6 miles (10 km) altitude. pic.twitter.com/b8EM4cOZbS
— Intuitive Machines (@Int_Machines) February 23, 2024