தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றம் வரப்போகிறது எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுடன், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எல்லோருடனும் இணைந்து வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வலிமையான கூட்டணி அமையும். நமது ஜி.கே.வாசன், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். நல்ல மனிதர்.
ஜி.கே.வாசனிடம் நான் எப்போது அரசியல் ஆலோசனைகள் பெறுவது உண்டு. அந்த வகையில், அடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் ஆதரவுடன் வளமான கூட்டணியைத் தமிழ்நாட்டில் உருவாக்குவோம்.
எல்லோரும் சேர்ந்து, அண்ணன், தம்பிகளாக, ஜாதி, மதம் கடந்து மோடி அவர்களை மீண்டும் பாரதப் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடுவோம் என்றார்.