போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.
சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் அனுப்புகின்றனர். கட்டத் தவறினால், கால்சென்டர் வாயிலாக நினைவூட்டுகின்றனர்.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் நேற்று தொடங்கினர். சென்னையில் சோதனை ரீதியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.