எதிர்காலச் சாதனையாளர்களான மாணவர்களும், அவர்களை உருவாக்கும் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கோயம்புத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் 33வது ஆண்டு விழாவில் விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் உரையாடியது, பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒவ்வொருவரும் சமூகத்தில் சிறந்து விளங்க, பள்ளிக் கல்வியே அடிப்படை. அந்த வகையில், ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளி, கல்வித் துறையில் 33 ஆண்டுகளாக பல நூறு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியிருப்பது அரிய செயல் ஆகும்.
எதிர்காலச் சாதனையாளர்களான மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை உருவாக்கும் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோயம்புத்தூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தை நிர்வகிக்கும், கோவை விளாங்குறிச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33வது ஆண்டு விழாவில் விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் உரையாடியது, பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. (1/3) pic.twitter.com/M5zFhY2Zr2
— K.Annamalai (@annamalai_k) February 26, 2024