கோவை, காந்திபுரத்தில் இரவு நின்று கொண்டிருந்த பேருந்தில் மர்ம நபர் ஒருவர், ஓட்டுநரிடம் பணத்தை திருடும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தனியார் பேருந்துகள் வரிசையாக நிறுத்திவைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், அங்கிருந்த தனியார் பேருந்தில் மர்ம நபர் ஒருவர், அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடிவிட்டு, பேருந்தில் தூங்கிக் கொண்டு இருந்த நடத்துனரின் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை திருடுகிறார்.
அது தொடர்பான காட்சி பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.