உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 56 எம்.பி. பதவிகள் காலியாக உள்ளது. இதில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தில் 10 எம்.பி. இடங்கள் காலியாக உள்ள நிலையில் 11 பேர் போட்டியிடுன்றனர்.
இதேபோல, கர்நாடகா மாநிலத்தில் 4 எம்.பி. இடங்கள் காலியான நிலையில் 5 பேர் போட்டியிடுகின்றனர். சற்று முன்னர் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.