இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது, சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியவரகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
இதேபோல், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குள் புகுந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கனடாவில் காலிஸ்தானிய சக்திகள் ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீச கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது என்றார்.
எனினும் அந்த விவகாரம் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், கனடாவில் விசா நடைமுறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், நிலைமை மேம்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்திலும் நிலைமை மேம்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.