போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
டில்லி கைலாஷ் பார்க் என்ற இடத்தில் நடத்திய சோதனையில், 75 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘சூடோபெட்ரின்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சென்னையைசேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சாந்தோமை சேர்ந்தவரும், திமுக புள்ளியுமான ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அவரது சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.