பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்றுக் கொண்டாா்.
பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தலுடன் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.
பஞ்சாப் மாகாணப் பேரவைத் தோ்தலில் 137 இடங்களைக் கைப்பற்றிய பிஎம்எல்-என் கட்சி மரியம் நவாஸ் தலைமையில் ஆட்சி அமைக்கிறது. அந்த அரசுக்கும் ppp உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், லாகூரிலுள்ள பஞ்சாப் மாகாண ஆளுநா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நவாஸ் ஷெரீஃப், ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.