சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டதாக எம்.ஜி.எம் என்ற தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்தது. புகார் அளித்தும், இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அந்த தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், பெருநகர சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ. 12 லட்சம் அபராதமும், எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ. 5 லட்சம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த என்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.