நாணயங்கள் மற்றும் காந்தங்களில் உள்ள துத்தநாகம் (Zinc) பாடிபில்டிங்கிற்கு உதவும் என நம்பி, சுமார் 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை டெல்லியை சேர்ந்த ஒரு நபர் விழுங்கியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு பல வயித்தியங்கள் செய்தும் குணமடையவில்லை.
இந்நிலையில் இந்த நபர் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அடிக்கடி காந்தங்கள் மற்றும் நாணயங்களை சமிட்டதாக உறவினர்கள் கூறினார்.
இதையடுத்து அவருக்கு வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தப் போது வயிற்றில் குடல் பகுதியில் அதிகப்படியான நாணயங்கள் மற்றும் காந்தங்கள் குடலில் அடைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மிட்டல், ஆலோசகர்கள் டாக்டர் ஆஷிஷ் டே மற்றும் டாக்டர் அன்மோல் அஹுஜா, மருத்துவ உதவியாளர் டாக்டர் விக்ரம் சிங் மற்றும் ரெசிடென்ட் டாக்டர்கள் டாக்டர் தனுஸ்ரீ மற்றும் டாக்டர் கார்த்திக் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு வெற்றி கரமாக செய்து முடித்து நாணயங்கள் மற்றும் காந்தங்களை அகற்றினர்.
இதில் அவரது சிறுகுடலில் பல்வேறு அளவுகளில் 1, 2, 5 ரூபாய் மதிமுள்ள 39 நாணயங்கள், 37 காந்தங்கள் பல்வேறு அளவுகளில் மீட்கப்பட்டது.
ஏன் அவற்றை உட்கொண்டீர்கள் என்று கேட்டபோது, அந்த நபர் டாக்டரிடம் கூறிய பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
நாணயங்களில் இருக்கும் துத்தநாகம் உடலைக் கட்டமைக்க உதவுகிறது என்றும் காந்தம், நாணயம் ஆகியவை குடலில் இருந்தால் அவை துத்தநாகத்தை உறிஞ்சுவதற்கு உதவும் என்றும் நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
			















