தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
மேலும், மனுதாரர் எட்டு மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால், வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டார்.