இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் - இந்தியா - அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!
Aug 7, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இஸ்லாமாபாத் உள்நாட்டிற்குள்ளேயே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானை அமெரிக்கா புறந்தள்ளியது ஏன்?

அமெரிக்காவின் வர்த்தகப் போரையும், ஏதேச்சதிகார போக்கையும் புறந்தள்ளிய இந்தியா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது… இதன் தாக்கத்தையும், இந்திய சந்தை கைவிட்டுப்போவதையும் உணர்ந்த அமெரிக்கா, இந்தியா மீது அடாவடித்தனமாக விதிக்கப்பட்ட 50 சதவிகித வரியை 18 சதவிகிதமாக குறைத்து வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், பாகிஸ்தான் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது… அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அடிக்கடி சந்தித்து கைகுலுக்கிக் கொண்டபோதும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்குதம் இந்த ஒப்பந்தம் பேரிடியாக மாறியுள்ளது…. அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரித்துரைத்தது, அமைதி வாரியத்தில் டிரம்ப் இருப்பதை புகழ்ந்து தள்ளியது என பாகிஸ்தான் அதீத அளவில் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டியபோதும் அந்நாட்டிற்கு 19 சதவிகித வரிவிதிப்பு அமலில் இருக்கிறது…

இந்தியா- அமெரிக்க ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு விழுந்த சம்மட்டி அடி என உள்நாட்டிலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன, பல மாதங்களாக, பாகிஸ்தானின் தொடர்பு எல்லைக்கு அப்பால் அமெரிக்கா இருந்ததாகவும், அதேநேரத்தில் டிரம்பின் அழுத்தத்தை எதிர்கொண்ட இந்தியா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வர்த்தக ஒப்பந்தத்தை நிலைநிறுத்தியுள்ளது..

அண்மையில் பிரதமர் மோடியுடன் தாம் இருக்கும் இந்தியா டுடே அட்டைப்படத்தை ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்தியாவை தனது நெருக்கமான கூட்டாளி என குறிப்பிட்டிருந்தார் டிரம்ப்…. இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இந்தியாவைவிட, பாகிஸ்தானுக்கு வரி விதிப்பானது ஒரு சதவிகிதம் அதிகம் என்பதால், இஸ்லாமாபாத்தின் ஜவுளி, ஆடைகள் போன்றவை அமெரிக்க சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்ற பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்..

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹம்மத் அசார், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தோல்வி என்று பதிவிட்டுள்ளார்… 21ம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கை என்பது தனிப்பட்ட உறவுகளை பற்றியது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார வலிமை, வரிகள், சந்தை அணுகலை பற்றியது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்மைக்கால வர்த்தக ஒப்பந்தங்கள் வளமான வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்… இந்தியா சுயசார்பு நிலைப்பாட்டில் இருந்து பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறும் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், ஆனால், பாகிஸ்தான் தலைமையானது தனிப்பட்ட ஈடுபாட்டையே பெரிதும் நம்பியிருந்ததால், பாதகமான சூழலுக்கு தள்ளப்பட்டதாக விமர்சிக்கின்றனர்… ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தம் பாகிஸ்தானில் பொருளாதார சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்..

Tags: United StatesIslamabadopposition domesticallydealt a major blowtrade agreementPM ModiIndiapakistanus
Share
Tweet
SendShare
Previous Post

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

Next Post

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies