இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தோனியை காண ஜடேஜா அவர் வீட்டிற்கு முன் சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் நான்காவது போட்டி கடந்த 23 ஆமாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரையும் கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது என்பதால், போட்டியின் போது ஏதேனும் ஒரு தருணத்தில் மைதானத்திற்கு தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை. இந்த நிலையில் தோனியை காண இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா நேரில் சென்றுள்ளார்.
தோனி வீட்டின் கதவுகளுக்கு முன்பாக நின்று ரவீந்திரா ஜடேஜா புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜடேஜாவின் பதிவில், ஜாம்பவானான தோனியின் வீட்டிற்கு முன் ரசிகனாக நின்று புகைப்படம் எடுப்பது ஜாலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜடேஜா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ஜாம்பவானை ஜடேஜா சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார் ஜடேஜா. அந்த வெற்றியால் உற்சாகமான தோனி, ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடினார்.