பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் சென்னையில் காலமானார்.
நாடக நடிகர், கதாசிரியர், சின்னத்திரை நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் அடடே மனோகர். இவர், 3,500 -க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார். மேலும், தொலைக்காட்சி, வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். இதுவரை சுமார் 3,500 நாடகங்களில் நடித்துள்ளார்.
மேலும், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் வாயிலாக, தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
சென்னையில் வசித்து வந்த அடடே மனோகர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் காலமானார்.
அடடே மனோகர் மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.