இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் ( IPL ) தொடரின் வரலாற்றை பார்ப்போம்.
ஐபிஎல் : இந்தியாவில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அதற்கு காரணம் 1983 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றது முதல் நமக்கு கிடைத்த பல கிரிக்கெட் ஜாம்பவங்களின் அதிரடி ஆட்டம் வரை ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் ஆண்டு ஒரு டி20 தொடரை நடத்தலாம் என்ற எண்ணம் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டுவந்தது தான் இந்தியன் பிரீமியர் லீக் ( IPL ).
ஐபிஎல் தொடக்கம் :
இந்தியன் பிரீமியர் லீக் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மொத்தமாக 8 அணிகள் பங்குபெற்றன.
அதன் முதல் சீசனில் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK ), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), டெல்லி டேர்டெவில்ஸ் (DD), மும்பை இந்தியன்ஸ் (MI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் (DEC) ஆகிய அணிகள் பங்குபெற்றது.
முதல் போட்டி ஏப்ரல் 18, 2008 இரவு 8 மணிக்கு பெங்களூரில் தொடங்கியது. இதில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் முதல் போட்டியில் விளையாடின. இதில் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் சீசனில் இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்றது. இதில் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.
ஐபிஎல் நினைவுகள் :
2011 ஆம் ஆண்டு முதன் முதலில் பத்து அணிகள் விளையாடின. அப்போது புதிதாக இரண்டு அணிகள் நுழைந்தன. அதில் புனே வாரியர்ஸ் இந்தியா (PWI) மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (KTK).
2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஒன்பது அணிகள் விளையாடின. கொச்சி டஸ்கர்ஸ் அணி விளையாடவில்லை. 2014ஆம் ஆண்டு எட்டு அணிகள் மட்டுமே விளையாடின புனே வாரியர்ஸ் இந்தியா அணி விளையாடவில்லை.
2013 ஆம் ஆண்டு டெக்கான் அணியை சன் குழுமம் வாங்கியது. அணியின் பெயர் சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் என்று மாற்றம் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய இரு அணிகள் விளையாடின குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்.
2018 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் விளையாடின. குஜராத் அணியும் புனே அணியும் விளையாடவில்லை.
2022 ஆம் ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் நுழைந்தன அவை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ். இந்த இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றன.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிபோட்டி யாராலும் மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். மழையின் காரணமாக போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது இன்றளவும் ரசிகர்களின் மனதில் நினைவிருக்கும்.
ஐபிஎல் விருதுகள் :
ஐபிஎல் போட்டிகளில் பல விருதுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்படுகின்றன. அதில் முக்கியமான விருதுகளைப் பற்றி பார்ப்போம்.
“Orange Cap” இந்த விருது ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு கொடுக்கப்படும்.
“Purple Cap” இந்த விருது ஒரு சீசனில் அதிக விக்கட்டுகளை எடுத்த பந்து வீச்சாளருக்கு வழங்கப்படும்.
“Most Sixes” ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும்.
“Most Fours” ஒரு சீசனில் அதிக பௌண்டரிகள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும்.
“மிகவும் மதிப்பு மிக்க வீரர்” என்ற விருது ஒரு சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும்.
“Emerging Player” என்ற விருது வளர்ந்து வரும் வீரர் ஒருவருக்கு அவருடைய சிறப்பான ஆட்டத்திற்காக வழங்கப்படும்.
“Electric Striker” என்ற விருது ஒரு சீசனில் அதிகமுறை குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும்.
“Gamechanger” ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரருக்கு இந்த விருது வழங்கப்படும்.
மதிப்போடு விளையாடிய அணிக்கு “Fair Play” என்ற விருது வழங்கப்படும்.
சிறப்பான கேட்ச் பிடித்த வீரருக்கு ஒரு விருது வழங்கப்படும். அதிகதூரம் சிக்ஸர் அடித்த வீரருக்கு விருது வழங்கப்படும்.
ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் :
2008 : ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது – சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2009 : டெக்கான் சார்ஜர்ஸ் கோப்பையை வென்றது – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரன்னர் பட்டம் வென்றது.
2010 : சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது – மும்பை இந்தியன்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2011 : சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரன்னர் பட்டம் வென்றது.
2012 :கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது – சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2013 : மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது – சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2014 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது – பஞ்சாப் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2015 : மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது – சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2016 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை வென்றது – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரன்னர் பட்டம் வென்றது.
2017 : மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ரன்னர் பட்டம் வென்றது.
2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரன்னர் பட்டம் வென்றது.
2019 : மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது – சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2020 : மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது – டெல்லி கேபிட்டல்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2021 : சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2022 : குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது – ராஜஸ்தான் ராயல்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது – குஜராத் டைட்டன்ஸ் ரன்னர் பட்டம் வென்றது.
ஐபிஎல் 2024 :
ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.