ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலை பிராந்திய இடங்களில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இந்த பனியாலும், குளிரின் தாக்கத்தாலும் பலரும் தவித்து வருகிறன்றனர்.
இந்த பனியிலும் தற்போது ஒரு இடத்தில மட்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
‘பைன் பேலஸ் பிளாட்டினம்’ என்ற ஹோட்டலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய எஃப்&இஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” நாங்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு இயந்திரங்களையும், தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியுள்ளோம், ஆனால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகிறது, பொங்கி எழும் தீயை அணைக்க நேரம் ஆகலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.