தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் லாரி ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 5 வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் இன்று காலை வழக்கம் போல், பேருந்து, லாரி, கார் உள்ளிட்டவை சென்று கொண்டிருந்தது.
அப்போது, தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்ற வாகனம் மீது திடீரென மோதியது. இதில், இரண்டு கார்கள் அதே இடத்தில் நொறுங்கின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தோர், உயிரிழப்புக் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் மீது மோதியது தெரிய வந்துள்ளது.