உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 10 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடை கடும் போட்டி நிலவியது.
எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அடிப்படையில் பா.ஜ.க-வில் 7 வேட்பாளர்களும், சமாஜ்வாடி கட்சியில் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலை நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் கூடுதலாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
வாக்குப்பதிவு முடிந்து வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க நிறுத்திய 8 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதில், பா.ஜ.கவுக்கு கூடுதலாக ஒரு எம்.பி. கிடைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்ததால் பா.ஜ.க-வின் 8 -வது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். இனால், பா.ஜ.க உற்சாகத்தில் உள்ளது.
8-வது வேட்பாளராகத் தொழிலதிபர் சஞ்சய் சேத் நிறுத்தப்பட்டார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.