“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. நெல்லைக்கு வருவது எனக்குக் கிடைத்த பாக்கியம். எந்தப் பிரிவு மக்களாக இருந்தாலும், அவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையைப் பாஜக காப்பாற்றும். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். தமிழ்நாடு புதிய சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெற போகிறது.
டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கு இருக்கிற இடம் குறைந்து போய்விட்டது, நெருக்கமாக வந்துவிட்டோம். தென் தமிழக மக்களுக்கு எல்லாம் சென்று அடைந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் கிராமங்களில் குடிநீர் திட்டம் வெறும் 21 லட்சம் மட்டுமே. ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக இங்கே 5 ஆண்டுகளில் ஒருகோடி இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது. மக்களுக்குத் தேவையானதை பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று உறுதியளித்தார்.