தி.மு.க அமைச்சர் வெளியிட்ட விளம்பரத்தில் சீன ராக்கெட் படம் இடம் பெற்றதால், சர்ச்சை வெடித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது, 17,300 கோடி ரூபாய் அளவு மதிப்புள்ள திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
இது தொடர்புடைய நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
அதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்திய ராக்கெட்டுக்கு பதில், சீன ராக்கெட் படம் இடம் பெற்றிருந்தது. இதனைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.