உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நாளை (பிப்.29-ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரையில், சட்ட விரோதமாகச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
அவ்வாறு புகார் எழுந்தபோது, அன்றைய உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் அகிலேஷ் யாதவ்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சம்பந்தப்பட்டுள்ளதால், நாளை அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்ட விரோத சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சிக்கி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.