குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 ஆயிரத்து 300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. இதனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரிகாரிகள் கண்டுபிடித்து அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், போதைப்பொருட்களை கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய எல்லையை நோக்கி ஒரு படகு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வருவதை இந்திய ரோந்து விமானம் கண்டுபிடித்தது.
இதுகுறித்து உடனடியாக கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படையினர் அந்தப் படகை கண்காணிக்க கடற்படை கப்பல் ஒன்றை கடலில் நிறுத்தினர். அப்படகில் போதைப்பொருள் இருக்கலாம் என்பதால், இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும், குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதை அடுத்து, சந்தேகத்திற்கிடமான படகை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அந்த படகில் சோதனை செய்ததில், சுமார் 3 ஆயிரத்து 272 கிலோ எடைகொண்ட பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர். மேலும், படகில் இருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.