இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 914 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 914 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 200 பேர் மீண்டுள்ளனர். தற்போது வரை 4 கோடியே 44 இலட்சத்து 95 ஆயிரத்து 56 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் டெல்லியில் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37 பேருக்கும், டெல்லியில் 37 பேருக்கும், சத்தீஸ்கரில் 16 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது வரை, 220 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 260 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.