அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராணா கோஸ்சுவாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் தான் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராணா கோஸ்சுவாமி, பாஜகவில் விரைவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.