முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கடந்து வந்த பாதை!
Jul 26, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Feb 29, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார். புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை முடித்தார். 1918ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிப்புரிந்தார்.

1930ல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை அறிவித்தபோது, தேசாய் ஆங்கிலேயர்களின் நீதி மீது நம்பிக்கை இழந்த அவர் தனது பணிவியை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். சுதந்திர போராட்டத்தின் போது தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர் உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக செயல்பட்டார்.

1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற போது மும்பை மாகானத்தில் பி.ஜி. கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார். மக்களின் ஒப்புதல் இல்லாமல் உலக போரில் இந்தியாவின் பங்கேற்பை கண்டித்து காங்கிரஸ் அமைச்சகர்கள் 1939ம் ஆண்டு சபையிலிருந்து விலகினார்.

மகாத்மா காந்தியால் துவக்கப்பட்ட சத்யாகிரகத்தில் பங்கேற்றத்திற்கு தேசாய் சிறையில் அடைக்கப்பட்டு 1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப்பட்டார். ஆகஸ்ட் 1942, இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர்  1952ல் அவர் மும்பை முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.

ஏழைமக்களும் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லாதவர்களுக்கு வாழ்க்கையை வாழ அடிப்படை வசதி கிடைக்கும் வரை சோஷியலிசம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று அவர் நம்பினார். விவசாயிகள் மற்றும் வாடகைதாரர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான சட்டங்கள கொண்டுவருவதில் தேசாய் ஆர்வம் காட்டினார். இந்த விஷயத்தில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களைவிட இந்த அரசு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டது.

மாநிலங்களின் மறு அமைப்புக்குப் பிறகு 1956, நவம்பர் 14-அன்று தேசாய் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன்பிறகு மார்ச் 22, 1958 ஆம் ஆண்டு நிதி அமைச்சராகப் பதவியேற்றார்.

நிதித்துறை நிர்வாகத்திலும் பொருளாதார திட்டமிடுதலிலும் அவர் கூறியவாரே செயல்பட்டார். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளைச் சந்திக்க அவர் அதிக அளவில் வருமானம் ஈட்டி தேவையற்ற செலவைக் குறைத்து நிர்வாகத்திற்கான அரசின் செலவை சிக்கனமாக மேற்கொள்வதை ஊக்குவித்தார். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நிதி ஒழுங்கு முறையை அமுல்படுத்தினார். சமூகத்தின் சிறப்புரிமை பெற்ற பிரிவினரின் ஆடம்பர வாழ்க்கை முறைக்குத் தடை விதித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1963-ஆம் ஆண்டு காமராஜர் திட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பண்டிட் நேரு அவர்களுக்குப் பிறகு பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக முறையில் சீர்திருத்தம் கொண்டுவர தேசாயை நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராகப் பதவியேற்க வற்புறுத்தினார். பொது வாழ்க்கையில் பல்வேறு துறையில் அவர் கொண்டிருந்த நீண்டகால அனுபவம் அவருடைய சிறப்பான செயல்பாட்டிற்க்கு உதவியது.

1967-ஆம் ஆண்டு தேசாய், இந்திராகாந்தியின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், நிதித்துறையின் இணை அமைச்சராகவும் பணி புரிந்தார். 1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திரா காந்தி அவரை நிதித்துறையிலிருந்து நீக்கினார். பிரதம மந்திரிக்கு அவருடன் பணிபுரியும் அமைச்சர்களின் துறைகளை மாற்ற தனியுரிமை இருந்ததை ஒப்புக்கொண்ட தேசாய், இந்திர காந்தி பெயரளவில்கூட தன்னிடம் இந்த மாற்றம் குறித்து ஆலோசிக்காதது. தனது சுயமரியாதையை காயப்படுத்துவது போல் உணர்ந்தார். ஆதலால், வேறு வழியின்றி தனது துணைப்பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

1969ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, தேசாய் காங்கிரஸ் அமைப்புடனே இருந்தார். எதிர்கட்சி செயல்பாடுகளில் அவர் முன்நின்று செயல்பட்டார். 1971ல் அவர் மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1975, கலைக்கப்பட்ட குஜராத் சட்டபேரவையின் தேர்தலை நடத்துவது சம்மந்தமாக அவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை மேற்கொண்டார்.

அவருடைய உண்ணாவிரதத்தின் விளைவாக 1975ல் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. நான்கு எதிர்கட்சிகளையும் சுயேட்சைகளையும் கொண்ட ஜனதா முன்னனி புதிய அவையில் பெரும்பான்மையை பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியின் தேர்வு செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் அறிவித்ததையொட்டி ஜனநாயக கொள்கையின் அடிப்டையில் காந்தி தனது ராஜினாமாவை சமர்பித்திற்க வேண்டும் என்று தேசாய் கருதினார்.

ஜூன் 26, 1975ல் அவசர கால சட்டம் கொண்டவரப்பட்டபோது தேசாய் கைது செய்யப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு முடிவில் சிறிது காலத்திற்கு 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். நாடு முழுவதும் சிறப்பாகப் பிரச்சாரம் செய்து 1977-ல் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற அவர் தூண்டுகோலாக இருந்தார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியின் சார்பில் அவர் மக்களவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.

எந்தவொரு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஒரு சாமானிய மனிதர் அதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தியாவின் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதில் தேசாய் உறுதியாக இருந்தார். பிரதமராக இருப்பினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டினார்.

அவரைப் பொறுத்தவரை உண்மை என்பது சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும். அவசர காலங்களில் கூட கொள்கைகளை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் அவர் தனது  கொள்கைகளை கடைபிடித்தார். வாழ்க்கையில் ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்ற கொள்கையை அவர் கடைபிடித்தார்.

Tags: former Prime Minister Moraji Desaimoraji desaiMoraji Desai birth day
ShareTweetSendShare
Previous Post

இந்திய மக்கள்தொகையின் 10,000 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர்!

Next Post

நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies