மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடுமபத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளளார்.
मध्य प्रदेश के डिंडौरी जिले में हुई सड़क दुर्घटना में अनेक लोगों के हताहत होने का समाचार अत्यंत पीड़ादायक है। मैं शोक संतप्त परिवारजनों के प्रति संवेदनाएं व्यक्त करती हूं। मेरी प्रार्थना है कि इस हादसे में घायल हुए सभी लोग शीघ्र स्वस्थ हों।
— President of India (@rashtrapatibhvn) February 29, 2024