மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பாலியல் புகாரில் கைதாகி உள்ள ஷேக் ஷாஜகானை ஆறு ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.
இதனையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டம் செய்தனர். 55 நாட்களாக தலைமறைவாக இருந்த, ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்று இரவு கைது செய்தது.
இந்த நிலையில், சந்தேஷ்காலி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பாலியல் புகாரில் கைதாகி உள்ள ஷேக் ஷாஜகானை ஆறு ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது.