கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த விலைக்கே மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இதனால், தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று (மார்ச்-1) ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.46,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20 -க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.76,200 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.