கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு ராஜாஜி நகரில் பிரபல பிரபலமான உணவு விடுதி ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு ராஜாஜி நகர் அருகே உள்ள மிகவும் பிரபலமான ஒரு உணவு விடுதியில் இன்றும் வழக்கம்போல மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், இங்கு மர்ம பொருள் ஒன்று வெடித்ததாகவும், இதில் மூன்று முதல் நான்கு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெடித்தது சமையல் எரிவாயுவா? அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என்பது குறித்த ஆய்வுகளை பெங்களூரு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.